இலங்கைக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை!
#SriLanka
#India
#Egg
Nila
2 years ago

முட்டை இறக்குமதியின் முதல் கட்டமாக, ஒரு தொகுதி முட்டை அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் தொகுதி அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



