பிரான்சில் இருந்து 49 தமிழ் இளைஞர்கள் நாடு கடத்தப்படலாம்! விடுக்கப்பட்ட கோரிக்கை
#SriLanka
#France
#Airport
Mayoorikka
2 years ago

இலங்கையில் இருந்து பிரான்சிற்கு கப்பலில் சென்ற இளைஞர்கள் சிலர் நாடுகடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது.
கடந்த டிசம்பர் 23ஆம் திகதி 52 பேருடன் கப்பல் ஒன்றில் சென்ற இளைஞர்கள் அனைவரும் பிரான்சில்,ரிஜுனியன் எனும் சிறிய தீவில் தங்க வைக்கபப்ட்டுள்ளனர்.
அவர்களின் விசா நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படலாம் என அறியப்படுகின்றது.
இந்நிலையில் அந்த இளைஞர்கள் மிகவும் விரக்தியில் இருப்பதாக எமது லங்கா 4 தளத்துக்கு தெரிவித்திருக்கின்றார்கள்
தம்மை நாடு கடத்த கூடாது தடுக்குமாறு அனைவரையும் ஒத்துழைத்து செயல்படுமாறு அந்த இளைஞர்கள் அனைத்து சமூக சேவை மனித உரிமை அமைப்புகள் இடம் அவர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.



