கொழும்பு சிறைச்சாலையில் பதற்றமான சூழல்
#Prison
#Colombo
Prathees
2 years ago

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் கைதிகள் குழு சோதனையிடச் சென்ற போது அமைதியின்மை ஏற்பட்டது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இணைந்து கைதிகளை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் அழைத்து வரப்படும் சில கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைகளுக்குள் கொண்டு வர முயற்சிப்பதால் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.



