நாடு முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளது
Kanimoli
2 years ago

நாடு முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாகவும் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள பிரதான பல்பொருள் அங்காடியின் முகாமையாளர் ஒருவர் கூறுகையில்,
“பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடுபவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்படுகிறது.
அந்த திருடர்கள் கூரிய ஆயுதங்களால் ஊழியர்களை காயப்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் இருவர் திருடர்களால் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதில் காயமடைந்துள்ளதாக முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



