வடக்கு ரயில் சேவைகள் தொடரும்: புனரமைப்புப் பணிகள் ஒத்திவைப்பு
#SriLanka
#NorthernProvince
#Train
#Travel
Mayoorikka
2 years ago

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 8 ஆம் திகதி வரை வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் வழக்கம்போல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதை ஐந்தாம் திகதியிலிருந்து 5 மாதங்களுக்கு மூடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடக்குப் பாதையில் சேவையில் ஈடுபடும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்திய கடன் உதவித் திட்டங்களின் கீழ் வடக்கு ரயில் பாதையைப் பழுதுபார்ப்பதற்காக 91 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும்.



