சந்தானம் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. விஜயின் வாரிசு படத்துடன் மோதவுள்ள துணிவு படம் ஆக்ஷன் மாஸ் காட்சிகளுடன் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. இதனிடையே இப்படத்திற்கு பின்பு நடிகர் அஜித் தனது அடுத்த படமான ஏகே62 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள நிலையில், அஜித்தின் முகவரி படம் போன்றே பீல் குட் படமாக உருவாகயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விக்னேஷ் சிவனும் படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.இதனிடையே இப்படத்தில் நடிக்க நடிகர் சந்தானத்தை விக்னேஷ் சிவன் அணுகியுள்ளார். உடனே சந்தானமும் ஓகே சொல்லியுள்ளாராம்.
நடிகர் சந்தானம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கடந்த சில வருடங்களாக படஙகளில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது படங்கள் தோல்வியுற்றாலும் கூட, நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடித்து பல தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளியுள்ளார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம், குளு குளு உள்ளிட்ட படங்கள் படுதோல்வியடைந்தது.
தற்போது இயக்குனர் பிரஷாந்த் ராஜ் இயக்கத்தில் கிக் படத்தில் நடித்துள்ள சந்தானம், இப்படத்தில் சாட்டடே இஸ் கமிங்கு என்ற பாடலை முதன் முதலாக பாடகராக அறிமுகமாகி பாடியும் உள்ளார்.அண்மையில் இப்படத்தின் கண்ணம்மா பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பாக என் நண்பன் ஆர்யா கூப்பிட்டால், நான் அவன் படத்தில் மீண்டும் காமெடியனாக களமிறங்கி நடிப்பேன் என தெரிவித்தார் சந்தானம்.
இந்த விஷயம் தீயாய் பரவிய நிலையில் உதயநிதி ஸ்டாலினும் சந்தானத்தை தனது படத்தில் நடிக்க சொல்லி கேட்டார், ஆனால் சந்தானம் மறுத்துவிட்டார். இப்படி யாருக்குமே அடிபணியாத சந்தானம் அஜித்தின் ஏகே62 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இப்படத்தில் காமெடியனாக சந்தானம் நடிக்கவில்லையாம். அஜித்திற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அஜித்தின் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் காமெடியனாக வலம் வந்த சந்தானம், 8 வருடங்களுக்கு பின்பு அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் டி.இமானின் இசையில் சந்தானம் நடித்து வரும் படம் ஒன்றில், விக்னேஷ் சிவனின் வரிகளில் பாடல் எழுதுமாறு வாய்ப்புக்கொடுள்ளாராம் சந்தானம்.



