அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது
#Arrest
#Police
Prathees
2 years ago

மஸ்கெலியா பிரவுன்லோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கூறியதையடுத்து பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



