மூன்று மாதங்களுக்குள் சாதனை படைத்த கொழும்பு தாமரைக்கு கோபுரம்!
#SriLanka
#Colombo
#Tourist
Mayoorikka
2 years ago

கொழும்பு தாமரை கோபுரத்தை இதுவரை 500,000 க்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக கொழும்பு தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்களின் பார்வைக்காக கோபுரம் திறக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளதாகவும் மேலும் 4,083 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.



