சவுதி திருமண புதிய சட்டத்தால் சிக்கவுள்ள போர்த்துகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ

Prasu
3 years ago
சவுதி திருமண புதிய சட்டத்தால் சிக்கவுள்ள போர்த்துகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்த்துகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

காரணம் சவுதி அரேபியாவில் திருமணம் ஆகாமல் யாரும் ஒரே அறையில் தங்க கூடாது. இது அந் நாட்டு சட்ட விதிகளுக்கு எதிரானது.

தற்போது ரொனால்டோ அவருடைய காதலியான ஜார்ஜினா உடன் திருமணம் ஆகாமல் உறவில் இருக்கிறார்.இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை.

தற்போது சவுதியில் இரண்டு ஆண்டுகள் விளையாட இருக்கும் ரொனால்டோ தனது காதலியுடன் தங்குவது சட்டவிரோதமாக கருதப்படும்.

இதனால் ரொனால்டோ என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் பணமா காதலியா சிறையா என்ற சிக்கலுக்கு ரொனால்டோ தள்ளப்பட்டுள்ளார்.

எனினும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அல் நசார் நிர்வாகம், “ரொனால்டோ வெளிநாட்டு வீரர் என்பதால் சவுதி அரேபியாவின் சட்டம் அவருக்கு பொருந்தாது.

மேலும் ஏதேனும் குற்றச்செயல் நடந்தால் மட்டுமே சவுதி அரேபியாவின் சட்டம் படி தண்டனை கிடைக்கும். இதனால் ரொனால்டோவுக்கு சிக்கல் இல்லை.” என்று கூறப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்த்துகல் அணிக்காக விளையாடிய முக்கிய ஆட்டத்தில் ரொனால்டோ வெளியேற்றப்பட்டார்.

எனினும் வெளிநடப்பு சுற்றில் போர்த்துகல் அணி தோல்வி தழுவிய நேரத்தில் கடைசியாக விளையாட அனுமதிக்கப்பட்டார் .

மேலும் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அங்கிருந்து வெளியேறினார். 

அல் நசார் அணியுடனான ஒப்பந்தம் மூலம் ரொனால்டோ உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி வந்த ரொனால்டோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும் அல் நசாரின் விளையாடும் ஆட்டத்தில் ரொனால்டோ பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அதற்கு காரணம் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் விளையாடிய போது நடத்தை விதிகள் மீறியதன் காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் தடை விதித்து இருக்கிறது. இதனால் ரொனால்டோ அல் நசார் அணிக்கு களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4