17ம் திகதி முதல் உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்த தடை

#SriLanka #exam #2023
Prasu
3 years ago
17ம் திகதி முதல் உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்த தடை

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதை தடை செய்யுமாறு கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4