தமிழைக் காணவில்லை - யாழ்ப்பாணத்தின் நிலை என்ன?

#Nallur #Temple #Tamil #Jaffna #SriLanka
Nila
3 years ago
தமிழைக் காணவில்லை - யாழ்ப்பாணத்தின் நிலை என்ன?

இலங்கையில் அன்று தொட்டு இன்று வரை நம் மொழியைக் காப்பாற்றுவதற்காக போராடி வந்தாலும் என்னமோ நம் தமிழ் மொழி ஆங்காங்கே காணாமற்தான் போய்க்கொண்டிருக்கின்றது.

இலங்கையில் பெரும்பான்மையான பகுதிகளில் அதாவது தென்னிலங்கை பேரூந்துகளில், வைத்தியசாலைகள், பொதுப்பூங்காக்கள் வீதிப் பெயர்ப்பலகைகள், என மேலும் பல இடங்களில் தமிழ்மொழி எழுத்துப்பிழைகள் போடப்பட்டு தமிழைக் கொச்சைப்படுத்துவதாக காணப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக சுட்டிக்காட்டினாலும் திருத்தியமைக்காமலேயே இன்றுவரைக்கும் பேணிவருகின்றனர்.

இது தமிழை மேலும் கொச்சைப்படுத்துவதாகவும் சீரழிப்பதாகவும் அடிமையாக்குவதாகவுமே இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், அன்று தொட்டு இன்றுவரை தமிழ் மரபியலுக்கேற்ப இந்து கலாச்சாரத்தையே கண்ணென கடைப்பிடித்துவரும் யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி நுழைவாயிலில் தமிழைக் காணவில்லை. மாறாக ஆங்கிலமும் சிங்களமும் புகுத்தப்பட்டுள்ளது.

இதை யாருமே கண்டுகொள்ளாதது ஏன்? இதற்கு என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவே தொடருமானால் யாழ்ப்பாணம் நாளை என்னவாகுமோ...?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4