பிரித்தானிய அரச படையில் பணியாற்றிய போது 25 தலிபான் பயங்கரவாதிகளை கொன்றதாக இளவரசர் ஹாரிக்கு தலிபான்கள் கடும் எதிர்ப்பு

#world_news #UnitedKingdom #Britain #Murder
Nila
3 years ago
பிரித்தானிய அரச படையில் பணியாற்றிய போது 25 தலிபான் பயங்கரவாதிகளை கொன்றதாக இளவரசர் ஹாரிக்கு தலிபான்கள் கடும் எதிர்ப்பு

பிரித்தானிய அரச படையில் பணியாற்றிய போது 25 தலிபான் பயங்கரவாதிகளை கொன்றதாக இளவரசர் ஹாரி கூறியது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதனை இளவரசர் ஹரி தனது தி ஸ்பே என்ற சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.

எனினும், இளவரசர் ஹரியின் இந்த கருத்துக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இளவரசர் ஹரியால் கொல்லப்பட்டது தலிபான்கள் அல்ல, ஆப்கானிஸ்தான் குடிமக்களே என்று கூறியுள்ளனர்.

பொதுமக்கள் கொல்லப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது போர்க்குற்றம் என்றும் தலிபான் அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4