போலி தலதா மாளிகையின் பகுதி இடிக்கப்பட்டுள்ளது

பொத்துஹெர அஹுகுடா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் போலி தலதா மாளிகையின் பத்திரிப்பவ என கூறப்படும் பகுதியே இடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரிவைக் கட்டியவர்களே அதனை இடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொத்துஹெர அஹுகுடா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் போலி தலதா மாளிகையை அவதானிப்பதற்காக முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வாவும் நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
அதன் ஸ்தாபகரான ஜனக சேனாதிப, பத்திரிப்புவ என்ற பொய்யான தலதா மாளிகையின் பகுதியை இடிக்க சம்மதித்ததாக முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பௌத்த விகாரைகள் என போலியான இடங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்ட அவர், பௌத்த மதத்தின் அடிப்படையில் போலியான விடயங்களை பரப்பும் நபர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டார்.



