போதைப்பொருள் வியாபாரிகளின் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட 9 பேர் கைது

நாரஹேன்பிட்டி, மன்னிங் டவுன் மற்றும் கித்துல்வத்தை ஆகிய இடங்களில் போதைப்பொருள் வியாபாரிகளின் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட 09 சந்தேக நபர்களை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மோதலில் காயமடைந்த இருதரப்பையும் சேர்ந்த பலர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் போது, இரு தரப்பினரும் மற்றைய தரப்பினரை தாக்குவதற்காக தம்மிடம் வைத்திருந்த வாள்கள், கத்திகள், கோல்ப் கிளப்புகள் மற்றும் சில இரும்பு கம்பிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தேகநபர் ஒருவரால் மோதலில் ஈடுபட்ட தரப்பினர் வழிநடத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



