பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள புத்தகத்தில் முன்னாள் காதலி குறித்த பரபரப்பு தகவல்

#world_news #UnitedKingdom #Britain #Love #Prince Harry
Nila
1 year ago
பிரித்தானிய இளவரசர் ஹரி  எழுதியுள்ள புத்தகத்தில் முன்னாள் காதலி குறித்த பரபரப்பு தகவல்

பிரித்தானிய இளவரசர் ஹரி தான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் வெளியிட்டுள்ள தகவல்கள் பல தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள Spare எனும் புத்தகம் வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகிறது.

ஆனால், அது தவறுதலாக ஸ்பெயினில் ஏற்கனவே வெளியாகிவிட்டதைத் தொடர்ந்து, அதிலுள்ள பல தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அந்த புத்தகத்தில் தனது முன்னாள் காதலி குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை முதன்முறையாக வெளியிட்டுள்ளார் இளவரசர் ஹரி.

தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davyயைப் பிரிந்த பின், ஹரி Caroline Flack என்ற பெண்ணை பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளார்.

உண்மையில், Caroline Flack பிரித்தானியர்களின் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத வகையில் கலந்துவிட்ட புகழ்பெற்ற Love Island என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார். ஆனால், ஹரிக்கு அவரைத் தெரியவில்லையாம். ஆனாலும் அது குறித்து வருந்தாத Caroline Flack, ஹரியுடன் இனிமையாக பழகியுள்ளார்.

ஆனால், இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், Carolineஉடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத் துவங்கி விட்டார்களாம்.

இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக Carolineஉடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.

பின்னர் Lewis Burton என்ற நபரை காதலித்த Caroline, அவரைத் தாக்கியதாக வழக்குத் தொடரப்பட்டது. தான் தன் காதலரைத் தாக்கவில்லை என்று அவர் கூறியும் அவர் Love Island நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார் Caroline. அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!