பொதுஜன பெரமுனவின் தேர்தல் ஒரு சவால் இல்லை - பந்துல குணவர்தன

Kanimoli
3 years ago
பொதுஜன பெரமுனவின் தேர்தல் ஒரு சவால் இல்லை - பந்துல குணவர்தன

எந்த சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்டாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அமைச்சர் பந்துல குணவதன இன்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சவாலான தேர்தல் அல்ல எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு சேறுபூசல்கள், குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது எனக்கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டுக்ககாக இணைந்து பணியாற்ற முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரசாரங்கள் உட்பட தேர்தல் பணிகளில் பசில் ராஜபக்ச செயற்பாட்டு ரீதியாக ஈடுபடுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறப்பான வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4