தனது மகளின் திருமணத்தன்று தந்தையின் இதயம் துடிக்காமல் நின்றுபோன சம்பவம்!

#SriLanka #Death #heat
Mayoorikka
3 years ago
தனது மகளின் திருமணத்தன்று தந்தையின் இதயம்  துடிக்காமல் நின்றுபோன சம்பவம்!

தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர்   இதயத் துடிப்பு இல்லாமல் மரணித்த சம்பவம் ஒன்று   நாவலப்பிட்டி கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், நாவலப்பிட்டியைச் சேர்ந்த மீரா சையிப் மொஹமட் சாலி (வயது 62) என்பவரே மரணித்துள்ளார்.

திருமண நாளன்று, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீர் மாரடைப்பால் நடுவீதியிலேயே மரணித்துள்ளார்.

அந்த திருமண வைபவம் உடுநுவர பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்காக அவர், தன்னுடைய மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டியவில் இருந்து வெலம்பட எனும் இடம்வரைக்கும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தனது கணவன் செலுத்திச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில், எதிர்திசையில் பயணிக்கும் ஒழுங்கையில் பயணித்துக்கொண்டிருந்தது. இதுதொடர்பில் மனைவி, அறிவுறுத்தியும் அது அவரது காதுகளில் விழவில்லை.

எனினும், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் இருவர், அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், தனக்கு நெஞ்சு வலிக்கிறது. மூச்செடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்போது வீதியில் ​பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோவை நிறுத்திய பொலிஸார், அவரை அவரது மனைவியுடன் ஓட்டோவில் ஏற்றி கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

எனினும், பயணிக்கும் வழியிலேயே அவர் மரணித்துவிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4