போலி பீடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் பண்டாரகமவில் கைது
#Arrest
Prathees
2 years ago

நீர்கொழும்பு பிரதேசத்தில் பீடி நிறுவனம் ஒன்றின் உற்பத்திப் பொருட்களை போன்று போலியான முறையில் தயாரிக்கப்பட்ட பீடிகளை கொண்டு சென்ற நபர் ஒருவர் பண்டாரகம பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான முப்பத்தைந்து பீடி பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
ஹிக்கடுவ குமாரகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வர்த்தக நிலையத்திற்கு மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே பீடிப் பொருட்களை விநியோகித்துள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.



