கஞ்சாவுடன் பிடிபட்ட எஸ்எஸ்பியின் மோசமான செயல்பாடு குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன

மொனராகலை பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத், தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது, நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் உத்தியோகத்தர் கடமையாற்றியதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, ஈஸ்டர் தாக்குதலில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை உள்ளடக்கிய கட்டான பொலிஸ் அதிகார வரம்பு அப்போது அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.
அப்போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சிசில குமார ஹேரத், ஈஸ்டர் தாக்குதல் தினத்தன்று கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்ட போதும் பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்போது மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷ்பந்து தென்னகோன், மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



