அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்து வருவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார் - அருட்தந்தை சிறில் காமினி

Kanimoli
3 years ago
 அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்து வருவதாக  கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார் - அருட்தந்தை சிறில் காமினி

தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்து வருவதாக  கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவுக்கு இலங்கை காவல்துறையின் உயர் பதவியை வழங்கும் முயற்சி தொடர்பில் கர்தினாலின் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மை வெளிவருவதைத் தடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு பாதுகாப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாக அருட்தந்தை சிறில் காமினி குற்றம் சுமத்தியுள்ளார்.
நிலந்த ஜயவர்தன அண்மையில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார், அதேவேளையில் அவர் அடுத்த காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படுவார் என தகவல்களும் வெளியாகி வருகின்றன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தும், அதனை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4