தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம் காரணமாக தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழப்பு

Prasu
3 years ago
தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம் காரணமாக தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழப்பு

கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு 1/4  பகுதியில் இன்று (10) தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்துள்ளார்.

அண்ணன் தம்பிக்குயிடையில்  தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம் காரணமாக தம்பியால் அண்ணனை கத்தியால் குத்திய பொழுது சம்பவயிடத்திலே அண்ணன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

37 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான  தருமராசா தவசீலன் என்பவரே  இறந்தவர் ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பாரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4