பிரித்தானிய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பில் வணிகச் செயலாளரின் அறிவிப்பு

#world_news #United_States #Britain #Parliament #France
Nila
3 years ago
பிரித்தானிய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பில் வணிகச் செயலாளரின் அறிவிப்பு

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும்போது குறைந்தபட்ச சேவையை வழங்குவது, மக்களின் உயிரை பாதுகாக்கும் என வணிகச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். 

அதேநேரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வேலை நிறுத்த எதிர்ப்பு மசோதா தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்கும்போது அஞ்சல் குறியீடு லாட்டரி இல்லை என்பதை உறுதிப்படுத்தும் எனவும் கூறினார். 

இந்த மசோத சட்டமாகிவிட்டால் சில தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தின்போதும் தொடர்ந்து பணியாற்ற வேண்டி வரும் எனவும் இந்த சட்டமூலம் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்நிலையில், இந்த சட்டமூலத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது வேலை நிறுத்த உரிமை மீதான தாக்குதல் என அவர்கள் விமர்சித்துள்ளனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4