உங்கள் வீட்டில் பணக்குகையாக பணம் எடுக்க எடுக்க குறையாதிருக்க இம்முறையை செய்து பாருங்கள்.

#ஆன்மீகம் #பணம் #திசை #வீடு #தகவல் #spiritual #Home
உங்கள் வீட்டில் பணக்குகையாக பணம் எடுக்க எடுக்க குறையாதிருக்க இம்முறையை செய்து பாருங்கள்.

உங்கள் வீட்டில் பணத்தை செலவுக்காகவோ அல்லது வரவு வந்த பணத்தை எங்கு வைக்கிறீர்களோ அதனை ஒரு சரியான இடத்தில் வைத்திருப்பதன் மூலம், பணம் எடுக்கெடுக்க குறையாதிருக்க பின்வரும் வழிகளை நீங்கள் யாராகவிருந்தாலும் செய்து பாருங்கள்.

ஈசானி மூலை

உங்கள் வீட்டில் பண வைக்கும் பீரோ அல்லது பணம் வைக்கும் மேசைகள், பெட்டிகள் என எதுவுமே வீட்டின் ஈசானி மூலையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஈசானி என்பது தண்ணீரை குறிக்கும் இப்படி ஈசானி மூலையில் பணத்தை வைத்தால் நீங்கள் சேர்த்து வைக்கும் பணமும் தண்ணீர் போல் கரைந்து ஓடிவிடும்.

அக்னி மூலை

மேலும் வீட்டின் அக்னி மூலையிலும் பீரோ அல்லது நீங்கள் பணம் வைத்து எடுக்கும் பட்டிகள் அந்த இடத்தில் இருக்கக் கூடாது ஏனென்றால் அக்னீ என்பது தீ. தீயில் போட்ட பொருள் சாம்பலாக தான் போகும் இருந்த இடமே தெரியாது. அது போல நீங்கள் வைத்திருக்கும் பணம் இருந்த இடம் தெரியாமல் செலவாய்க் கொண்டே இருக்கும் அதனால் அக்னி மூலையில் பீரோவையோ அல்லது அந்த இடத்தில் பணம் வைத்து எடுப்பதையோ தவிர்த்து விடுங்கள்

கன்னி மூலை

விநாயகப் பெருமான் கோவில்களில் கன்னி மூலையில் தான் அமர்ந்திருப்பார். அதாவது தென்மேற்கு திசையில் தான் காட்சி தருவார் ஆகையால் உங்கள் வீட்டில் உள்ள பீரோவை கன்னி மூலையில் வைத்து அதாவது தென்மேற்கு திசையில் வைத்து பணம் எடுத்து வந்தால் பணம் மடம் மட மட வன வீட்டில் சேரும்

 பீரோவை தென்மேற்கு திசையில் வைத்து விட்டால் மட்டும் போதுமானதாக இருக்காது அப்படி நாம் தென்மேற்கு திசையில் வைத்த பீரோ ஒன்று வடக்கு நோக்கியோ அல்லது பீரோ நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் விநாயகருக்கு பிடித்த மஞ்சள் துண்டை விரித்து பீரோவுக்குள்ளும் மகாலட்சுமி படத்தை ஒட்டி வைப்பதன் மூலம் நமது வீட்டில் சுப காரியங்கள், மங்களகரமான காரியங்கள் நடப்பதற்கு தேவையான அளவு தங்கமும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

வடமேற்கு திசை

அலமாரி இப்படி நாம் தென்மேற்கு திசையில் வைத்திருக்கும் பீரோவில் இருந்து அடிக்கடி தின செலவுக்கு பணம் எடுப்பதை தவிர்த்து விட்டு. அதற்கு பதிலாக வட மேற்கு திசையில் ஒரு அலமாரியை வைத்து அதில் தினசரி செலவுகளுக்கு பணம் வைத்து எடுத்து வந்தால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும் நல்ல பலனையை கொடுக்கும். பணமும் அதிகளவில் சேரும்.

 

.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!