பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 17 பேர் உயிரிழப்பு

#Protest #government #Death
Prasu
3 years ago
பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 17 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

இதையடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 

அவரது ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்ய வேண்டும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டத்தில் அவ்வப்போது வன்முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெருவின் தென் கிழக்கில் ஜூலியாகா நகரில் உள்ள விமான நிலையம் அருகே அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. 

அப்போது பெட்ரோ காஸ்டிலோவின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். 

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை ஒடுக்கினர். 

இதில் 17 பேர் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4