உடற்பயிற்சியால் மஹிந்தவின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி!

Kanimoli
3 years ago
உடற்பயிற்சியால் மஹிந்தவின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உடற்பயிற்சியை மேற்கொள்வதற்காக கொழும்பு துறைமுக நகருக்கு அடிக்கடி  சென்றுவருகின்றதாக தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக அவரது பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

காலையில் உடற்பயிற்சிக்காக  அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் செல்வதாகவும் அவர்களில் முன்னாள் அமைச்சர் பௌசியின் புதல்வர் நௌசர் பௌசியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

 அத்துடன் மஹிந்தவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவும், உதைபந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொழும்பு துறைமுக நகருக்கு அடிக்கடி சென்று வருகிறார்.

நாமல் கடந்த ஆண்டு Tabata என்ற விளையாட்டை விளையாடி வருகின்றார். மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் அவர்களது மனைவிகளும் அவருடன் உடற்பயிற்சிக்காக இணைந்துள்ளனர்.

இந்தப் பயிற்சிகளுக்கு நாமலுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக, இந்திக அனுருத்த மற்றும் சனத் நிஷாந்த ஆகியோரும் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை  முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர்  துறைமுக நகரப் பயணத்தை வெளிப்படுத்தியமை அவருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4