தேர்தல் ஆணைக்குழுவில் ஜனாதிபதியின் தலையீடு! தலைவர் வெளியிட்ட தகவல்

#SriLanka #Sri Lanka President #Election #Ranil wickremesinghe
Mayoorikka
3 years ago
தேர்தல் ஆணைக்குழுவில் ஜனாதிபதியின் தலையீடு! தலைவர் வெளியிட்ட தகவல்

தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தில் ஜனாதிபதி எந்த விதத்திலும் தலையீடு செய்யவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்  தேர்தல் ஆணைக்குழுவினர்  நடத்திய  பேச்சுவார்த்தை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன  என்றும் அவர் சுட்டிக்காடியுளார்.

 நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விடுத்த அழைப்பிற்கு மதிப்பளித்து சென்றோமே ஒழிய ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் அழைப்பை ஏற்று தாங்கள் செல்லவில்லை என்றும்  நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

இந்தக் கலந்துரையாடலினால் ஆணைக்குழுவின் சுயாதீனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4