பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வெளிநாட்டு பங்காளி நாடுகளுக்கு மனித உரிமை கண்காணிப்பகம் விடுத்த வேண்டுகோள்!

#SriLanka #Sri Lanka President #Human
Mayoorikka
1 year ago
  பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வெளிநாட்டு பங்காளி நாடுகளுக்கு   மனித உரிமை கண்காணிப்பகம் விடுத்த வேண்டுகோள்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க உதவ வேண்டிய வெளிநாட்டு பங்காளிகள் அடிப்படை மனித உரிமைகள் சீர்திருத்தங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச அறிக்கையில் இவாறு  தெரிவித்துள்ளது.

2022இல் இலங்கையின் ஜனாதிபதிகளின் மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் பதிவில் எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை. 

2022 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தெருக்களில் இறங்கினர்.

இந்தநிலையில் நீண்ட காலமாக பாரதூரமான உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை மாதம் பதவி விலகினார். 

எனினும் புதிய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, பெரும்பாலும் அமைதியான போராட்டங்களை ஒடுக்கினார், 

செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்தார் மற்றும் கடந்த கால மீறல்களுக்கான நீதிக்கான கோரிக்கைகளை புறக்கணித்தார் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர்  மீனாட்சி கங்குலி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அழைப்புகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடக்குமுறையுடன் பதிலளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க உதவ வேண்டிய வெளிநாட்டு பங்காளிகள் அடிப்படை மனித உரிமைகள் சீர்திருத்தங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று மீனாட்ஷி கங்குலி கோரியுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கம், மாணவர் செயற்பாட்டாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கு இழிவான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் உட்பட, கருத்து வேறுபாடுகளை ஒடுக்கியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குமாறு வலியுறுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

எனினும் உறுதியான முன்னேற்றத்தைப் பெற அழுத்தம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அமைதியான போராட்டத்திற்கான உரிமையை மதிக்க அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் அழைப்புகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 712 பக்கங்கள் கொண்ட, சர்வதேச  மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2023ஆம் ஆண்டின் அறிக்கையில்,100 நாடுகளின் மனித உரிமை நடைமுறைகளை மதிப்பாய்வு செய்துள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!