தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

#SriLanka #India #Colombo
Mayoorikka
3 years ago
தூத்துக்குடி-கொழும்பு  இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

தூத்துக்குடி-கொழும்பு  இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான துரித  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாக தூத்துக்குடி துறைமுக ஆணையகத்  தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 குறித்த கப்பல் சேவை எதிர்வரும்  மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட  வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் வரும்  மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் கப்பல் வந்து இருப்பது ஒரு ஆரம்பம்தான். தொடர்ந்து பல கப்பல்கள் தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது”இவ்வாறு அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4