மூன்றாம் உலகப் போர் நடக்காது - உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

#Ukraine #Russia #War #Zelensky
Prasu
3 years ago
மூன்றாம் உலகப் போர் நடக்காது -  உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 'கோல்டன் குளோப்' விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

"முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால் மூன்றாம் உலகப் போர் நடக்காது. இது மூன்று பாகங்கள் கொண்ட தொடர் கிடையாது.

'கோல்டன் குளோப்' விருதுகள் வழங்கும் விழாவானது ஒரு சிறப்பான காலகட்டத்தில் தொடங்கியது. 1943-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது இந்த விழா தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது உலகிற்கே தெரிந்த விஷயமாக இருந்தது.

இப்போது 2023-ம் ஆண்டு. உக்ரைனில் இன்னமும் போர் ஓயவில்லை. ஆனால் இந்த போரின் போக்கு நாளுக்கு நாள் மாற்றம் பெற்று வருகிறது. உலக நாடுகளின் உதவியுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அடக்குமுறை தடுத்து நிறுத்தப்படும். உக்ரைன் சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நடத்தும் இந்தப் போரில் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி."

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4