மீண்டும் சர்ச்சைக்குள் கோட்டபாய- யஸ்மின் சூக்காவின் சர்வதேச அறிக்கையால் திணறல்

#SriLanka #Gotabaya Rajapaksa
Mayoorikka
3 years ago
மீண்டும் சர்ச்சைக்குள் கோட்டபாய- யஸ்மின் சூக்காவின் சர்வதேச அறிக்கையால் திணறல்

கோட்டாபய ராஜபக்ச மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த காலகட்டத்தில் சிங்களவர்கள் பலரை காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கோட்டாபய ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் தகவல்  வெளியிட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டு  குறைந்தது 700 பேர் முக்கியமாக சிங்களவர்கள் அவரது கட்டளையின் கீழ் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.
 
குறித்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ச மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தின் அதிகம் அறியப்படாத மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

இது, ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி சம்பந்தப்பட்ட இரண்டாவது வன்முறைக் காலகட்டமாகும் என்றும் யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் தெரிவித்துள்ளது.

குறித்த  வழக்கில் கோட்டாபய ராஜபக்ச, ஒரு சந்தேக நபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4