அஹுங்கல்லையில் ஒரு கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

#Police
Prathees
3 years ago
அஹுங்கல்லையில் ஒரு கிலோ எடையுடைய  கிளைமோர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தங்காலை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அஹுங்கல்ல, மருதானை வத்த பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில் இருந்து கிளைமோர் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாழைமரத்துக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கிளைமோர் குண்டின் எடை சுமார் 01 கிலோவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரின் உதவியுடன் கிளைமோர் வெடிகுண்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதை அடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட சுஜீ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் பிரதான சீடரான ரங்க சுபுன் குமாரவின் வீட்டின் தோட்டத்தில் இருந்து இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4