இன்றைய வேதவசனம் 14.01.2023: மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேதவசனம் 14.01.2023: மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். (எபேசியர் 5:22)

ஆம், அதுதான் ஒரு நல்ல மனைவியின் பரிசுத்தம்.
இரண்டு மணி நேரம் வேதம் வாசித்து, நான்கு மணி நேரம் ஜெபித்து, தேவனுக்கு காணிக்கைகளை செலுத்தி விட்டு, புருஷனுக்கு கீழ்படியவில்லையென்றால், நீங்கள் பரிசுத்தத்தில் குறையுள்ளவர்கள் என்று தான் அர்த்தம்.

மனைவி என்பவள், வீட்டிலுள்ள புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும்! புருஷன் தலையாயிருக்கிறான் (1கொரி 11:3) என்று வேதம் சொல்கிறது.

ஸ்திரீகள், புருஷன் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால், நீங்கள் பரிசுத்தயில்லாத குடும்ப வாழ்க்கை நடத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு குடும்பம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தேவன் எழுதிக் கொடுத்திருக்கிறார். மனைவி புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும். (கொலோ 3:18)

மனைவி புருஷனை எதிர்த்து பேசக்கூடாது. புருஷன் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது. மனைவி பருஷனை கேவலப்படுத்திவிடக்கூடாது. கீழபடிந்திருக்கவேண்டும்.

கீழ்படிந்திருப்பது என்பது பெண் அடிமைத்தனம் அல்ல. சிலரா தவறாக புரிந்து கொள்கிறார்கள். பெண்கள் கீழ்ப்படிந்திருப்பது தான் அழகு என்று வேதம் சொல்லுகிறது.

வேதாகமத்தில் எந்த இடத்திலும் மனைவி கணவனுக்கு அடிமை என்று சொல்லப்படவேயில்லை. கீழ்ப்படிய தான் வலியுறுத்துகிறது!

கீழ்படிதல் என்பது ஒரு அற்புதமான சுபாவம், அது ஒரு அழகு! அதை செய்கிறீர்களா? அந்த அழகு உங்கள் வீட்டில் இருக்கிறதா? அந்த மாதிரியான பரிசுத்தம் உங்கள் குடும்பத்தில் இருக்கிறதா? சிந்தித்துப்பாருங்கள்!

பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக! ஆமென்!! அல்லேலூயா!!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!