உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கவுள்ள பழங்குடியினர் குழு

#Election
Prathees
1 year ago
உள்ளூராட்சி தேர்தலில்  களமிறங்கவுள்ள பழங்குடியினர் குழு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுவதற்கு வேதி தலைவர் உருவரிகே வன்னில அத்தோ  தலைமையிலான வேதி சமூகத்தின் குழு தீர்மானித்துள்ளது.

அவர்கள் தேசிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடுவார்கள்.

மஹியங்கனை, சொரணதொட்ட மற்றும் ஹாலியாலெல உள்ளூராட்சி சபைகளுக்கும் பதுளை மாநகர சபைக்கும் தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்புமனுக்களை வழங்குவதற்கு அவர்கள் முன்வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக முன்னணியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் இந்திக்க நுவன் குமார உள்ளிட்ட வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை பதுளை மாவட்ட தேர்தல் காரியாலயத்திற்கு வந்து இந்தப் பட்டியல்களுடன் பாதுகாப்புப் பணத்தையும் வைப்பிலிட்டனர்.

தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் வன்னில அத்தோ எனவும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேதி சமூகம் போட்டியிடவுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“பழங்குடி இனத்தைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். சுதந்திரத்துக்குப் பிந்தைய தேர்தலில் நாங்கள் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்தோம், ஆனால் அவர்கள் எங்களை மறந்துவிட்டார்கள்... அதுதான் வித்தியாசம்’ என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!