ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் 10 பேர் கைது

Kanimoli
1 year ago
ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் 10 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் இரண்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் இன்று தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் 10 பேரை கைது செய்துள்ளனர்.
படகுகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் படகுகள் சோதனையிடப்பட்டதாக இலங்கை கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, இலங்கை கடற்படை கடலோர மற்றும் கடற்கரை பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

இந்தநிலையில் 23 கிலோ மற்றும் 235 கிராம் எடையுடைய 22 ஹெரோயின் பொதிகளுடன் பேருவளை கடற்பகுதியில் படகு ஒன்றை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.
இதன்போது படகில் இருந்தவர்கள் ஹெரோயினை கடலில் வீசியுள்ளனர்.

இதனையடுத்து மேற்கு கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மற்றுமொரு மீன்பிடி படகொன்றும் படையினரால் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!