எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமானம் இல்லை: எப்படி 10 கோடி வழங்குவேன்! மைத்திரி

#SriLanka #Sri Lanka President #Maithripala Sirisena #Court Order #லங்கா4
Mayoorikka
1 year ago
எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமானம் இல்லை:  எப்படி 10 கோடி வழங்குவேன்! மைத்திரி

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  10 கோடி ரூபா இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதனால், தமக்கு நெருக்கமான மக்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பணத்தை திரட்டுவதற்கு நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பாரிய தொகையை நட்டஈடாக செலுத்தும் திறன் தன்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

என்னிடம் சொந்தமாக உந்துருளி கூட இல்லை. நிதியத்தை நிறுவுவதற்காக குழுவொன்றை அமைப்பேன். நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும்" என்று அவர் கூறினார்.

மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமான வழியில்லை என்றார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!