சுவிட்சர்லாந்து ஆர்காவு மாநிலத்தில் 6 பேருடன் பயணித்த கார் கவிழ்ந்தது - 18 வயது இளைஞன் பலத்த காயம்!

#சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #வாகனம் #விபத்து #தகவல் #swissnews #Switzerland #Accident
சுவிட்சர்லாந்து ஆர்காவு மாநிலத்தில் 6 பேருடன் பயணித்த கார்  கவிழ்ந்தது - 18 வயது இளைஞன் பலத்த காயம்!

ஆர்காவு மாநிலத்தில் அதிகாலை 1;30 மணியளவில் கார் விபத்து ஏற்பட்டதாக அம்மாநில பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இவ் கார் விபத்தில் ஆறு பேர் காயமடைந்ததாகவும் அதில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சூரிச் நெடுஞ்சாலையில் இருந்து அரோ மாநிலத்திற்கு செல்லும் வீதியில் கார் ஒன்று கவிழ்ந்திருந்த நிலையில் அதற்குள் ஒருவர் மூச்சற்று பேச்சற்று இருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவரை தீயணைப்பு படையின் மூலம் மீட்டு ஆம்புயூலன்ஸ் ஊடாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இக் காரில்  இவருடன்  பயணித்த மேலும் 16, 19, 43, 52, 53 வயது மதிக்கத்தக்கவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் மூவர் பெண்கள் என தெரியவந்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியாத போதிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

அதேநேரம், இவர்கள் குடிபோதையில் இருந்தனரா என்பதை அறியும்பொருட்டு இரத்தப் பரிசோதனையோடு சிறுநீர் பரிசோதனையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆரோ மாநில பொலிஸார் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அண்மை நாட்களாக சுவிட்சர்லாந்து பகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரித்தவண்ணம் உள்ளதாகவும் அதற்கு காரணம், போதையில் சாரதிகள் இருப்பதாகவும், கூடிய பனி வீதியில் படர்ந்திருப்பதாகவும், இளிஅஞர்கள் அதிவேகமாக கார் ஓட்டுவதாகவும் என  சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!