முக்கிய நாடொன்றிற்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

#SriLanka #Sri Lanka President #Ali Sabri #லங்கா4
Mayoorikka
3 years ago
முக்கிய நாடொன்றிற்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

 எதிர்வரும் 23 ஆம் திகதி அவர் சவூதி செல்லவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் பர்ஹான் அல் சவுத்தை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு பேரவை மற்றும் மக்கா மற்றும் மதீனா ஆளுநர்களையும் அமைச்சர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4