கொழும்பு துறைமுகத்தில் “ஐஸ்” என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் சிக்கியது!
#SriLanka
#Colombo
#Police
#drugs
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான போதைப்பொருள் தொகை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் “ஐஸ்” எனப்படும் மெத்தம்பெட்டமைன் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த அளவு மற்றும் சந்தை பெறுமதி தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே