இலங்கையின் மஹிந்த , கோத்தபாய மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளை ஊக்குவிக்கும் கனடா

#SriLanka #Canada #Mahinda Rajapaksa #Gotabaya Rajapaksa
Prasu
1 year ago
இலங்கையின் மஹிந்த , கோத்தபாய மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளை ஊக்குவிக்கும் கனடா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரி 10 ஆம் திகதியன்று இந்த நான்கு பேர் மீதும் கனடா தடைகளை விதித்தது.

1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலி, இந்த தடையை ஜி7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே, ராஜபக்ச சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி7 நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை வலியு

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்துக்கு இது தான் பிரச்சனை என்று தெரியும்.

எனவே சமாதானத்தை அடைய, உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள் என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜொலி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!