கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் மோதல்

#Colombo
Prathees
3 years ago
கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் மோதல்

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல  ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள பிரபல  ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

கடையின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு துணிகளை வாங்க வந்த இரண்டு வாடிக்கையாளர்கள், வெளியில் வரும்போது வாகனத்தை தடுக்கும் வகையில் மற்றொரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்துள்ளனர். மேலும் அருகில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மற்றைய வாகனத்தின் சாரதியிடம் வாகனத்தை திரும்பப் பெறுமாறு பல தடவைகள் கூறிய போதும் வாகனத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட தம்பதிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

காலதாமதம் காரணமாக துணிகளை வாங்க வந்த வாடிக்கையாளருக்கும், துணிக்கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் முறைபடபாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4