பிங்கிரியில் இருந்து அதிவேக வெடிபொருட்கள் பறிமுதல்: சிஐடியிடம் விசாரணை

#Arrest #Police #Investigation
Prathees
1 year ago
பிங்கிரியில் இருந்து அதிவேக வெடிபொருட்கள் பறிமுதல்: சிஐடியிடம் விசாரணை

பிங்கிரிய விலத்தவ பகுதியில் லொறியில் தயார் செய்யப்பட்ட இரகசியப் பெட்டியில் அதிஉயர் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு தமிழ் பிரஜைகள் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன்படி நேற்று (24) காலை பிங்கிரிக்கு சென்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை கையகப்படுத்தி சந்தேக நபர்களிடம் நீண்ட நேரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (23) பிங்கிரிய விலத்தாவ பொலிஸ் வீதித்தடையில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் அதியுயர் வெடிபொருட்கள் பொதி செய்யப்பட்ட 89 பிளாஸ்டிக் குழாய்களும், தலா 80 அடி நீளமுள்ள 21 சர்வீஸ் சரங்களும், 900 டெட்டனேட்டர்கள் அடங்கிய 9 பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிபொருட்கள் எதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை சந்தேகநபர்கள் சரியாகக் கூறத் தவறியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லொறியின் பின் தளம் பகுதியில் ரகசிய அறை இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், அதை ஆய்வு செய்துஇ அறையில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் பிற உபகரணங்களை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 33 வயது மற்றும் 45 வயதுடைய தமிழ் பிரஜைகள் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள்.

மீன்களை கொல்வதற்காக குருநாகலில் இருந்து மன்னாருக்கு இந்த வெடிபொருட்களை கொண்டு செல்வதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மீன்களை கொல்வதற்காக லொறிக்குள் மிக விரிவான அறைக்குள் வெடிபொருட்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!