தேர்தலுக்காக மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு போதிய பணத்தினை வழங்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்!

Mayoorikka
1 year ago
தேர்தலுக்காக மின்சாரசபை  மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு போதிய பணத்தினை வழங்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்!

தேர்தலுக்கு போதிய எரிபொருள் விநியோகம் மற்றும் தொடர் மின்சாரம் வழங்க இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு  போதிய பணத்தினை வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

போதிய ஏற்பாடுகள் வழங்கப்படாவிட்டால், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு போதிய எரிபொருள் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்ததாக புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாட்டிற்காக காத்திருப்பதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை இயக்குவதற்கு தொடர்ச்சியான மின்சாரம் தேவைப்படுகிறது மற்றும் அதே காலகட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களின் போக்குவரத்துக்கு அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.

இதனால், தேர்தலுக்கு போதிய எரிபொருள் விநியோகம் மற்றும் தொடர் மின்சாரம் வழங்குமாறு அந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் தேர்தல் ஆணையம் அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!