சுதந்திர தினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை?

#Sarath Fonseka #Ranil wickremesinghe
Prathees
1 year ago
சுதந்திர தினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை?

13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்செய்யப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் கூறியபோது, பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மௌனமாக இருந்தமை இந்த சந்திப்பின் குறிப்பிடத்தக்க அம்சமாகும் என்று இன்றைய தேசிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இரண்டு முறை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்த அரசியல்வாதி அமர்வு முழுவதும் அமைதியாகவே இருந்தார்.

எனினும் அவருக்குப் பின் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவை வெளியிட்டார்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடலின் போது, பெப்ரவரி 4ஆம் திகதி மூவர் மாத்திரம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இதற்கு அவரது மனைவி விஜயகலா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்தே அது கைவிடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்தவருமான மகேஸ்வரன், 2008 ஜனவரி 1ஆம் திகதியன்று கொழும்பின் இந்துக் கோவிலுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவரும் விடுவிக்கப்பட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளியை விடுவிக்க விரும்புவதாக பொன்சேகா நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், அவரது கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் பெறப்படவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்னும் அவரிடம் கலந்தாலோசிக்கவில்லை என பொன்சேகாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!