கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை

#Ranil wickremesinghe #IMF #China #Japan #Lanka4
Kanimoli
1 year ago
 கடன் மறுசீரமைப்பு தொடர்பில்  சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி தொடர்பில்  ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்து விட்டது.
இதன்படி 10 வருடங்களுக்கு கடன் தடைக்காலத்தையும், 15 வருட மறுசீரமைப்பையும் வழங்க இந்தியா உடன்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜப்பான் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பாரிஸ் கிளப் மூலம் ஆதரவை தெரிவித்தது
எனினும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி (எக்சிம்) வங்கி, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் அடிப்படையில் இரண்டு வருட கடன் தடையை வழங்க முடியும் என்றும் இலங்கையின் நிதியமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
என்றாலும்,  சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கை தொடர்பான திட்டத்தைத் தொடர சீன முன்மொழிவு போதுமானதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து கடன் வழங்குபவர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டமாக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. 
இந்தநிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவை நீட்டிக்கும் அறிக்கையை Pயசளை ஊடரடி இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் கிளப், இலங்கைக்கு 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 வருட கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிந்துள்ளது, இது நாட்டின் நிதி சிக்கல்களை ஒழுங்கமைக்க போதுமான நேரத்தை வழங்கும்.

ஆதாரத்தின்படி, சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற பரிஸ் கிளப்பிற்கு வெளியே உள்ள பல நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் தான், இலங்கை மத்திய வங்கியின் (ஊடீளுடு) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்யும் என நம்புவதாக வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!