அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட உத்தரவு

Prabha Praneetha
3 years ago
அரச  நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட உத்தரவு

இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விசேட உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி நான்காம் திகதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை அனைத்து அரச கட்டடங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு கோரப்பட்டுள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4