இன்றைய வேத வசனம் 31.01.2023: எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள்

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 31.01.2023: எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள்

இயேசுகிறிஸ்து தமது சீடர்களைத் தெரிந்தெடுத்து அவர்கள் தம்மோடு வாழவும் அவருடைய போதனைகளைப் பிறருக்கு அறிவிக்கவும் அதிகாரம் கொடுத்தார் (#மாற்கு 3:14,15) அதுவே முதல் திருச்சபையின் ஆரம்பம் என சிலர் கூறுவர். 

அவர் தாம் வாழ்ந்த போதே தனது சீடர்களுக்கு "நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி நான் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு போதியுங்கள்" (#மத்தேயு. 28:19,20) எனக்கூறிய அவரது கட்டளையே திருச்சபையின் அடிப்படை நோக்கம் என்பதையும் மறுக்க முடியாதது.

சீடர்கள் நேரில் கண்ட அவரது அற்புதச் செயல்கள், அவரது மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவைகள் சீடர்களின் போதனைகளுக்கு மையமாக அமைந்தன. திருச்சபையின் நம்பிக்கையும் இயேசுவின் உயிர்த்தெழுதலே.

“ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள். அவரை தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகள்" (#அப்போஸ்தலர்.3:15) என்ற பேதுருவின் அறைகூவலே இதற்கு முன்னுதாரணமாகும்.
 பெந்தேகோஸ்தே நாளில் மேலறையில் கூடிய 120 பேர் பெற்றதொரு புதிய அனுபவம் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான உருவாக்கம் எனவும் கூற முடியும்.

அங்கு இருந்த அநேகர் படிப்பறிவு இல்லாதவர்கள். பயந்த சுபாவம் உடையவர்கள். எனினும் அவர்கள் பெற்ற தைரியமும் அவர்களின் போதனைகள் மூலமாகவும் (அப். 1: ஏறக்குறைய முப்பது ஆண்டுகளில் முதலாவது எருசலேமில் மட்டும் இருந்த திருச்சபை, படிப்படியாக வளர்ந்து ஐரோப்பா ஆசியா நாடுகளில் உள்ள முக்கியமான நகரங்களில் பெருகியது.

சீடர்கள் அனைத்துத் தரப்பினருக்கும் நற்செய்தி அறிவித்தனர் (#மாற்கு 16:15). பாவத்தைக் குறித்தக் கண்டிப்பும், பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியையும் (#லூக்கா 24:47) இயேசு கட்டளையிட்டபடி நடப்பதற்கேற்ற வழிகளையும் போதித்து வந்தனர்.

 எனவே யூதரின் பண்டிகையான பெந்தேகோஸ்தே நாளன்று ஏறக்குறைய 3000 பேரும் (#அப்போஸ்தலர் 2:41) திருச்சபை மக்களின் நற்சாட்சியான வாழ்க்கை, ஐக்கியம், ஒருமனப்பட்ட செயல்பாடுகள் (#அப்போஸ்தலர்.2:46,47) மூலம் அனுதினமும் அநேகர் திருச்சபையிலே சேர்க்கப்பட்டார்கள்.

தேவாலயத்தில் பிறப்பிலேயே கைகால்கள் செயல்படாமல் முடக்கு வாதத்தில் (Paralytic) பாதிக்கப்பட்ட மனிதன் சுகம் பெற்றதன் வாயிலாக அன்றையத் தினமே சுமார் 5000 பேர் திருச்சபையில் இணைந்தனர். ஆண்களும், பெண்களுமாக (அப்போஸ்தலர் 4:33).

அப்போஸ்தலரின் தைரியமான போதனைகளைக்  கேட்டு கூட்டம் கூட்டமாகத் திருச்சபையில் சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் கூடி ஜெபித்து வந்தனர்.

அன்பு, ஐக்கியம், ஒருமனப்பட்ட எண்ணம், விட்டுக் கொடுத்தலின் தன்மை, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை ஆகிய நற்குணங்களோடு அவர்களின் சுயநலமற்ற வாழ்க்கை முறை திருச்சபையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.

படிப்படியாக சபைகள் வளர்ந்து சமாரியர் ( அப்போஸ்தலர் 6:4 ) மற்றும் யூதரல்லாதோர் சபைகளில் சேர்க்கப்பட்டனர்.

இதுவே சபைகளின் துவக்கம் என வேத அறிஞர்கள் கருதுகிறார்கள்.
பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். ( மாற்கு 16:15 )
ஆமென்!! அல்லேலூயா!!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!