45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ள அனைவருக்கும் வரி விதிக்க சர்வதேச நாணய நிதியம் கூறியது! பந்துல குணவர்தன

#SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #IMF #Bandula Gunawardana #taxes
Mayoorikka
1 year ago
45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ள அனைவருக்கும் வரி விதிக்க சர்வதேச நாணய நிதியம் கூறியது! பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியம் மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் உள்ள அனைவருக்கும் வரி அறவிடுவதற்கு  முதலில் தீர்மானித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், பேச்சுவார்த்தை மூலம் இந்த வரம்பை ஒரு இலட்சமாக உயர்த்த முடிந்துள்ளதாக அவர் கூறினார்.

“எதிர்கால கடனை அடைக்க, வருமான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அரசு நிறுவனங்களும், சட்டப்பூர்வ அமைப்புகளும் லாபம் ஈட்டினால், மக்கள் மீது இவ்வளவு வரிச் சுமையை நாம் சுமத்தத் தேவையில்லை.

இலாபம் இருந்தால் அது அரச வருவாயில் சேர்க்கப்படும். இதுபற்றி அரசியல் சாராத அறிவொளிப் பேச்சு நடத்துவது நல்லது. வரி வருவாயை நம்புவதை விட, வரி அல்லாத வருவாயை அதிகரிப்பது முக்கியம். அப்போது மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!