அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி இலங்கைக்கு வருகை! பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உறுதி செய்வார்

#SriLanka #sri lanka tamil news #America #Airport
Mayoorikka
3 years ago
அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி இலங்கைக்கு வருகை!  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உறுதி செய்வார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் விக்டோரியா நூலண்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டினை வந்துள்ளார்.

அவருடன், நாட்டின் அரச திணைக்களத்தின் இரண்டு உயர் அதிகாரிகளும் தூதுக்குழுவாக நாட்டுக்கு வந்துள்ளனர்.

இவர்கள் நேற்று (31) இரவு 10.10 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள சித்தாஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-191 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அமெரிக்க - இலங்கை நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களிலும் விக்டோரியா நூலண்ட் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை  இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை விக்டோரியா நூலண்ட் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4