கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர் குழுக்களுக்கு இடையில் மோதல்

#Colombo #Hospital #Police #sri lanka tamil news
Prathees
3 years ago
கொழும்பு  தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர் குழுக்களுக்கு இடையில் மோதல்

இரண்டு சிற்றூழியர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோதல்கள் தொடர்பில் மேலும் ஒரு  சிற்றூழியரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கம் மற்றும் வைத்தியசாலையின் தேசிய ஊழியர் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கற்கள் மற்றும் தடிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4