இன்றைய வேத வசனம் 04.02.2023: என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 04.02.2023: என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.

அன்பான இளம் நெஞ்சங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்! South Koreaவின் தலைநகரான சீயோல் (Seoul) பட்டணத்தில் ஏற்பட்டது அந்த அதிர்ச்சி சம்பவம்.

ஓட்டப்பந்தய வீராங்கனை Shiny Wilson அவர்களது Favourite 800 மீட்டர் ஓட வேண்டிய நாள் அது. பல பயிற்சி, பல முயற்சி, அயராது உழைத்து, பதக்கத்தை கைபற்ற வேண்டிய நாள்.

ஓட்டம் ஆரம்பித்தது சிறப்பாக ஓடி முடித்து வெற்றி வாகை சூட காத்திருந்த போது அந்த அதிர்ச்சியான அறிவிப்பு. Shiny Wilson தங்க பதக்கம் பெறவில்லை மாறாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

காரணம் 800 மீட்டர் ஓட்டத்தில் அவர்களுடைய ஓடு பாதையை 200 மீட்டர் வரை அந்த கோட்டை விட்டு மாறக்கூடாது. ஆனால் Shiny Wilson 200 மீட்டர் முன்பாகவே மாறிவிட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று அறிவித்தனர்.

உள்ளம் உடைந்துப் போனார். எப்படி இந்த தடுமாற்றம் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்க்கும் போது, 200 மீட்டர் முடிவில் ஒரு சிவப்பு நிற கொடி இருக்கும் அது தான் அவர்களுடைய அடையாளம். ஆனால் அன்றைய தினம் அங்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற கொடி இருந்தது. முதலில் மஞ்சள் நிறக் கொடி இருந்ததால் அது தான் அடையாளம் என்று நினைத்து, தடுமாறினேன் என்று வருத்தத்தோடு கூறினார்.

ஒரு சிறிய தவறினால் தடுமாற்றம் அடைந்து முடிவில் ஒரு பெரிய இழப்பை உண்டாக்கி, அன்றைய நாள் Shiny Wilsonனின் gold medal பறிபோனது மட்டும் அல்ல நம்முடைய ஒன்றிணைக்கப்பட்ட இந்தியத்திற்கே ஒரு பெரிய இழப்பாக மாறியது.

வாலிபனே இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய தடுமாற்றம், அல்லது ஒரு தவறான முடிவு கண்டிப்பாக ஒரு பெரிய பாதிப்பிலும், இழப்பிலும் தான் கொண்டு சேர்க்கும்.

எனவே உங்களுடைய வாலிபத்தில் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள உங்களின் தெளிவான தீர்மானமும், எடுத்த தீர்மானத்தில் உறுதியும் மிக அவசியம்.

ஒரு செத்த ஈ முழுப் பரிமள தைலம் முழுவதையும் நாறிப் போகப் பண்ணும். அதே போல் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றத்தின் போது தவறான தீர்மானம் பரிசுத்தத்தை கெடுத்து உங்கள் வாலிபத்தின் நறுமணத்தை பாழாக்கும்.

கர்த்தரை சார்ந்து முடிவு எடுக்கும் போது அவர் உங்களுக்கு உதவி செய்து உங்களில் ஜீவ வாசனையை பரவச் செய்வார். ஆமென்!! அல்லேலூயா!!!

இயேசுவே, என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும். ஆமென்!! அல்லேலூயா!!! (சங்கீதம் 17:5)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!